Tuesday, October 29, 2013

தீபாவளி ஸ்பெஷல்! நேற்றைய மெனு!!!

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பட்சணங்கள் செய்யும் வேலையை நேற்றைக்குத் தான் ஆரம்பித்தேன். ரோஷ்ணிக்கு யூனிட் டெஸ்ட் வேறு தினமும் இரண்டாக உள்ளது. பாட்டு கிளாஸ், யூனிட் டெஸ்ட், கடைகளுக்கு செல்வது என்று தொடர்ந்து வேலைகள். இதனோடு இந்த பட்சண வேலையும்.....:))

நேற்றைக்கு கடலைமாவு கார முறுக்கும், ஓமப்பொடியும் செய்தேன். புத்தகங்களை பார்த்து வேலை செய்த காலம் போய், சென்ற வருடம் முதலே இணையத்தில் தேடி செய்ய ஆரம்பித்து விட்டேன். எப்போதும் தேன்குழல், மனோஉப்பு, கறிவேப்பிலை முறுக்கு என்று செய்து கொண்டிருந்தேன்.  இந்த வருடம்  ”சொல்லுகிறேன்” காமாட்சி அம்மா குறிப்புப்படி ”காரமுறுக்கு” செய்தேன். நன்றாக வந்தது. நீங்களும் இந்த வருடம் செய்து பாருங்களேன்.


நேற்றைய மெனு!


கரகர ஓமப்பொடி!



காரமுறுக்கு!

காரமுறுக்குக்கு அளவை காமாட்சியம்மா பதிவு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஓமப்பொடிக்கு :-

கடலைமாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
வெண்ணை - 2 ஸ்பூன்
உப்பு, பெருங்காயம்
சிறிதளவு ஓமம் ஊறவைத்து அரைத்து வடிகட்டி சேர்க்க வேண்டும்.

வேலைகளுக்கிடையில் பதிவு போடுவதால் விலாவரியாக ரெசிபி எழுத முடியவில்லை....

நண்பர்களே! உங்க எல்லாரின் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

19 comments:

  1. முறுக்கு செய்தாகி விட்டது... ஓமப்பொடி குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. அப்படியே நம்ம ஆர்கானிக் பால்போண்டா வை கொஞ்சம் பாருங்க!
    த.ம.plus +3 வோட்டு

    ReplyDelete
  3. நியூஸிக்கு ஒரு பார்ஸேல் ப்ளீஸ். கை வலி என்பதால் இந்த வருசம் தீபாவளி பக்ஷணம் லெஸ்:(

    இனிய தீபா'வலி' வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. ஜமாய்க்கத் துவங்கிவிட்டீர்கள்
    படம் பார்சல் கேட்கத் தூண்டுகிறது
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தீபாவளி களை கட்ட ஆரம்பித்து விட்டது உங்கள் இல்லத்தில்! கார முறுக்கு, ஓமப்பொடி பார்ப்பதற்கே கரகரப்பாக சாப்பிடத்தூன்டுகிறது!!

    ReplyDelete
  6. சொல்லுகிறேன் காமாட்சி அம்மா குறிப்புப்படி கார முருக்கு. அளவு பார்க்க பார்க்க என்பதிவுக்க வரச்சொல்லியுள்ளாய். நன்றியும் அன்பும். ஓமப்பொடியும் சேர்த்து எடுத்துக் கொள்கிறேன். நன்றாக உள்ளது. அன்புடன்

    ReplyDelete
  7. அருமையான கரமுராக்களை ருசியுடன் ரஸித்துப்பார்த்து, பெருமூச்சு விட்டேன். ;) பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அட.. அருமை!
    காமாக்ஷியம்மாவின் குறிப்புகளோ... கார முறுக்கு பார்கவே செய்யத்தூண்டுகிறது!..
    ஓமப் பொடியும் சளைக்கவில்லை. அசத்திட்டீங்க..:)

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    த ம.6

    ReplyDelete
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. வரேன், வரேன், பக்ஷணம் சாப்பிட! நான் நாளைக்குத் தான் ஏதேனும் செய்யணும்.

    ReplyDelete
  11. அருமை.. தீபாவளி வந்து விட்டது.
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  12. அடடா. என்ன கலர் என்ன வாசம்.
    ஓம வாசனி இங்கயே வந்துவிட்டது ஆதி. காரமுறுக்கு ரொம்பச் சுவையாக இருக்கும்னு நினைக்கிறேன். இனிப்புப் பதிவு நாளைக்கா:) இனிய தீப நந்நாள் வாழ்த்துக்கள் மா.

    ReplyDelete
  13. தீபாவளி வந்துடுச்சுடோய்....!

    ReplyDelete
  14. முறுக்கையும், ஓமப்பொடியையும் ருசித்து, கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    இனிப்பு பதிவு இப்போது வெளியிட்டுள்ளேன்..... பார்க்காதவர்கள் பார்க்கவும்..

    ReplyDelete
  15. தீபாவளி வாழ்த்துகள் ஆதி!!

    ReplyDelete
  16. வாங்க தியானா,

    நன்றிங்க.

    ReplyDelete
  17. அருமை.

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. மாதேவி - மிக்க நன்றிங்க.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…